தேடப்பட்டு வந்த ஊழியர்… சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தபோது தூக்கிய போலீஸ்!

காவல்துறையால் தேடப்பட்டு வந்த இந்திய ஊழியர் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தபோது காவல்துறையிடம் சிக்கினார்.

கேரள மாநிலம் கண்ணணூர் பகுதி காவல்துறை அதிகாரிகள் “லுக் அவுட்” அறிவிப்பு மூலம் ஹீதாஸ் (27) என்ற ஊழியரை தேடி வந்துள்ளனர்.

“சிங்கப்பூர் டாலர்” உள்ளிட்ட ரூ.66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்!

இந்நிலையில், கடந்த பிப். 18 ஆம் தேதி காலை ஏர் இந்தியா விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஹீதாஸ் அதிகாரிகளிடம் சிக்கினார்.

இதனை அடுத்து, திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அவர் கண்ணனூர் காவல் துறையினரிடம்‌ ஒப்படைக்கப்பட்டார்.

இதனால், திருச்சி விமான நிலைய வளாகத்தில் பயணிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களை எடுத்தால், சிங்கப்பூர் ஊழியர்களுக்கு S$1,400 சம்பளம் – அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயம்!