தப்புக்கணக்கு போடும் வல்லரசு நாடுகளின் நடவடிக்கைகளால் அபாயம் ! – கானொளியில் பேட்டியளித்த அமைச்சர் விவியன்

Vivian Balakrishnan
உலகில் நாடுகளுக்கிடையேயான அரசியல் பிரச்சினைகள் நாளுக்குநாள் நிச்சயமில்லாத நிலையை எட்டி வருகின்றன.இந்நிலையில் சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றிபெற வேண்டுமானால் நம்பிக்கையும் சமூகப் பிணைப்பும் மிக முக்கியம் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த இவர், உலகம் இப்போது ஆபத்தான கட்டத்தில் நுழைவதாக தெரிவித்தார்.

“உலகின் வல்லரசு நாடுகள் போடும் தப்புக் கணக்குகளும் அவற்றின் நடவடிக்கைகளும் போருக்கு எளிதாக வழிவகுத்துவிடுகின்றன.எதுவுமே உறுதியாகத் தெரியவில்லை” என்று அவர் கூறினார்.
அண்மையில் நிகழும் புவிசார் அரசியல் நிலவரங்கள் தமக்கு கவலை அளிப்பதாகக் கூறிய அமைச்சர்,சிங்கப்பூர் விடுதலை பெற்றது முதல் அனுபவித்து வந்த வளர்ச்சி,வாய்ப்பு போன்றவை முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றிகரமான நாடாகத் திகழ சமூகப் பிணைப்பு,நம்பிக்கை போன்றவற்றை பலப்படுத்த வேண்டும் என்றார்.மேலும் உலக நாடுகள் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஏன் ஆபத்தான நிலையில் என்பதையும் பேட்டியில் விவரித்தார்.