ஆயுதம் வைத்திருந்த வழக்கில் இந்திய வம்சாவளிக்கு சிறை, பிரம்படி!

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில்

 

 

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளி மகேஸ்வரன். அவருக்கு வயது 29. இவர் கடந்த 2020- ஆம் ஆண்டு செப்டம்பர் 3- ஆம் தேதி முதல் வரும் அக்டோபர் 01- ஆம் தேதிகளுக்கு இடைப்பட்டக் காலத்தில் பல குற்றங்களை செய்து, பலமுறை சிறைகளுக்கு சென்று வந்துள்ளார். அதன்படி, கடந்த 2019- ஆம் ஆண்டு பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாக மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு மூன்று ஆண்டுகள் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், கடந்த 2020- ஆம் ஆண்டு மகேஸ்வரன் விடுவிக்கப்பட்டார்.

மலேசிய ரிங்கிட்டுக்கு எதிரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு புதிய சாதனை – மகிழ்ச்சியில் ஊழியர்கள்

அதேபோல், கடந்த 2020- ஆம் ஆண்டு நவம்பர் 30- ஆம் தேதி மகேஸ்வரன் குடித்துவிட்டு, குடிபோதையில், லிட்டில் இந்தியா பகுதிச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த 33 வயதான காவலரை மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மகேஸ்வரன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அந்த வகையில், கடந்த 2022- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3- ஆம் தேதி அன்று மகேஸ்வரன் தனது நண்பரான ஷெரன்சராஜ் உடன் கேண்டி பாருக்கு (Candy Bar) ஹார்பூன் என்றழைக்கப்படும் ஈட்டி போன்ற கூர்மையான ஆயுதத்தை எடுத்துச் சென்றுள்ளார். பின்னர், அந்த ஆயுதத்தை ஷெரன்ராஜுவிடம் மகேஸ்வரன் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து, ஷெரன்ராஜ் அந்த ஆயுதத்தைக் கொண்டு 23 வயது இளைஞரைக் குத்திக் காயப்படுத்தியுள்ளார். அப்போது, மகேஸ்வரன் கையில் வைத்திருந்த கத்தியைக் காட்டி,மற்ற இளைஞர்களை மிரட்டி உள்ளார்.

இரும்பு கட்டமைப்பு விழுந்து இந்திய ஊழியர் மரணம்: கட்டமைப்பு எடை 560கி… நிறுவனத்துக்கு செக்

அப்போது, அங்கிருந்த சிங்கப்பூர் காவல்துறையினர் மகேஸ்வரனை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த வழக்கில் மகேஸ்வரன் மீது வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால், மகேஸ்வரனுக்கு 22 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அத்துடன், அவருக்கு 12 பிரம்படி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, ஷெரன்ராஜ் (Sheran Raj) மீதான வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதால், அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.