திருமணப் பந்தியில் நடந்த தகராறு ! – பிரம்படியுடன் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்

marriage-of-convenience-related offences foreigners
(Photo: India filings)

பூன் லேயில் நடைபெற்ற திருமண விருந்தின் போது கத்தியால் வெட்டிய குற்றத்திற்காக நேற்று (நவம்பர் 30) இரண்டு பேருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது.21 வயதான முகம்மது சஜித் சலீம் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 6 பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டன.

நவம்பர் 2-ஆம் தேதி இவரது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.மேலும்,இவருடன் சேர்ந்து வன்முறையில் ஈடுபட்ட 20 வயது நபருக்கு மூன்றாண்டு மூன்று மாதச் சிறைத்தண்டனையுடன் 6 பிரம்படிகள் விதிக்கப்பட்டன.அத்துடன் $1,800 அபராதமும் விதிக்கப்பட்டது.

சிறைத் தண்டனையிலிருந்து விடுதலை ஆன பின்னர் ஓராண்டுக்கு எந்தவொரு வாகனத்தையும் இயக்கக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது.இருவரும் வேண்டுமென்றே கத்தியால் தாக்கியது மற்றும் மோசமான கும்பலில் சேர்ந்து தீங்கு விளைவித்தது போன்ற குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.

இருவரும் சிறுவர்களாக இருக்கும்போதே கலவரம்,வன்முறை போன்றவற்றில் ஈடுபட்டதால் சீர்திருத்த பள்ளியில் பயிற்சிப் பெற உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.