“அன்புடன் அப்பா” – மகனை உலகிற்கு வரவேற்க உடலை 8 மாதங்களில் செதுக்கிய சிங்கப்பூர் நபர்

weight-loss-105-to-70 singapore dad to his baby fitness

சிங்கப்பூரைச் சேர்ந்த டெரன்ஸ் கோ என்ற நபர் எட்டு மாதங்களில் தனது எடையில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்த தனது பயணத்தை படம்பிடித்து இரண்டு குறுகிய வீடியோக்களை TikTok-இல் பதிவேற்றி 200,000 பார்வைகளை ஈர்த்தார்.அவரது மனைவி கர்ப்பமாக இருந்த போதே அவரது எடை இழப்புப் பயணத்தை தொடங்கியுள்ளார்.

அவரது குழந்தைக்கு ஆரோக்கியமான மற்றும் முன்மாதிரியான அப்பாவாக இருக்க விரும்பியதால் உடல் எடையை குறைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டார்.அவரது உந்துதல் அவருக்கு பிறக்கவிருக்கும் குழந்தை என்று தெரிவித்தார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் அவரது உடற்பயிற்சியைத் தொடங்கினார்.இரவு உணவை தவிர்த்த கோ பசியுடன் தூக்கமில்லாமல் இரவுகளை கழித்ததாகவும், வாரத்தில் ஆறு நாள்கள் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் தசை வலிகளை பல மாதங்களாக சகித்துக்கொண்டதாகவும் அவரது மனைவி பகிர்ந்து கொண்டார்.வலிகளைப் பொறுத்துக் கொண்டதால்தான் 105 கிலோவிலிருந்து 70 கிலோவுக்கு உடல் எடையைக் குறைத்துள்ளார்.

மே 2021க்குள், அவரது இலக்கான 85 கிலோ எடையை அடைந்தார்.10 ஆண்டுகளுக்குப் பிறகு IPPT தேர்ச்சியில் 2.4 கிமீ ஓட்டத்தை 11 நிமிடங்கள் மற்றும் 52 வினாடிகளில் முடித்து, தனது தனிப்பட்ட உடல் தகுதித் தேர்ச்சி பெற்றார்.

அவர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிபிடியில் தேர்ச்சி பெற்றது இதுவே முதல் முறை. கோ அவரது மகனை ஆரோக்கியமான அப்பாவாக உலகிற்கு வரவேற்பதற்கான வாக்குறுதியை நிறைவேற்றும் இலக்கையும் குறித்தார்.

ஒவ்வொரு வாரமும் மூன்று முறை உடற்பயிற்சி,நடைப்பயிற்சி,ஜாகிங் மற்றும் புஷ்அப்ஸ் போன்றவற்றை தவறாமல் பயிற்சி செய்தார்.சில நேரங்களில் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக ஒரு முறை பொரித்த உணவை உட்கொள்வதாக அவர் பகிர்ந்து கொண்டார்.