“எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” – சிற்பி போல் தன்னைத்தானே செதுக்கிய சிங்கப்பூரின் சிலை!

weight loss singapore tiktok user diet walking
சிங்கப்பூரில் ஒரு பெண்ணின் அசாத்திய பயிற்சியும் முயற்சியும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இரண்டு வருடங்களுக்கு முன்பு 110 கிலோ எடை இருந்த அவர் தற்போது 68 கிலோவாக மாறினார்.
அந்தப் பெண் தனது எடை இழப்பு பயணத்தின் வீடியோக்களை TikTok இல் வெளியிட்டார்.இரண்டு வருடங்களில் 42 கிலோ எடையை குறைத்ததாக கூறிய Eggtingg மற்றவர்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்த தூண்டினார்.

கோவிட்-19 தொற்று பரவலின் போது தனது வாழ்க்கை முறை பழக்கங்களை மாற்ற முடிவு செய்த பெண்,வார நாட்களில் ஆரோக்கியமான உணவு பொருள்களை உண்ண ஆரம்பித்தார்.
ஆலிவ் எண்ணெய், பூண்டு மற்றும் மிளகாய் சேர்த்து கிளறி-வறுத்த பாஸ்தா மற்றும் சில சிப்பி சாஸ் அல்லது பூண்டுடன் வேகவைத்த அல்லது கிளறி-வறுத்த காய்கறிகள் போன்றவை அவளது ஆரோக்கியமான உணவுகளில் அடங்கும்.

வாரத்திற்கு 5 முறை உடற்பயிற்சி,குறைந்தளவு கலோரிகளடங்க்ய உணவுகளை உட்கொள்ளுதல்,நடைபயிற்சி போன்றவற்றை தவறாது கடைபிடித்தாள்.தினசரி 6 கிலோமீட்டர் முதல் 10 கிலோமீட்டர் வரை நடந்து செல்வார்.
இந்த ஆண்டு பிப்ரவரியில், தான் ஏற்கனவே 30 கிலோ எடையை குறைத்துவிட்டதாகவும், மேலும் 20 கிலோவை குறைக்க இலக்கு வைத்துள்ளதாகவும் கூறினார்.