“அசிங்கமான சிங்கப்பூர் ” – மலேசியர்கள் கடுப்பேத்தும் எல்லையை கடக்கும் சிங்கப்பூர் ஓட்டுனர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்

singapore

கடந்த ஏப்ரல் 1-ம் தேதியுடன் இரண்டு வருட Covid-19 கட்டுப்பாடுகள் சிங்கப்பூரில் முடிவுக்கு வந்தது. சமீபத்தில் சிங்கப்பூர் டாலர் வலுவடைந்து வருவதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டன.

இதனையடுத்து சமூக வலைத்தளங்கள் முழுவதுமாக மலேசியர்கள் தங்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைவது, சிங்கப்பூரர்கள் Johor Bahru-வில் சிங்கப்பூரின் வலுவான டாலரை பயன்படுத்தி மலிவான விலையில் பொருட்களை வாங்குவது போன்ற படங்கள் அதிக அளவில் பதிவிடப்பட்டுள்ளன.

குடிவரவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 4 நாட்களில் சுமார் 2,52,730 பயணிகள் பிரதான நுழைவு வாயில்கள் வழியாக மலேசியாவில் நுழைந்து வெளியேறினர். சிங்கப்பூரிலிருந்து 65,165 பேரும், இந்தியாவிலிருந்து 2477 பேரும், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவில் இருந்து கிட்டத்தட்ட 13000 பேரும் ,இங்கிலாந்திலிருந்து 1485 பேரும் பயணித்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சிங்கப்பூரின் Woodlands மற்றும் Tuas சோதனைச் சாவடிகள் வழியாக ஏப்ரல் 1ஆம் தேதி மட்டும் 27600 பேர் பயணித்ததாக சிங்கப்பூர் குடிவரவுத்துறை மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்தது. எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு இரண்டு நாட்கள் கழித்து பல சிங்கப்பூரர்கள் மோசமாக நடந்து கொள்வது போன்ற படங்கள் மற்றும் வீடியோக்கள் பல மலேசியர்களை கொந்தளிக்க வைத்தன.

சாலையோரம் சிறுநீர் கழிப்பது, கவனக் குறைவுடன் நெடுஞ்சாலையில் வாகனத்தை ஓட்டுவது போன்ற பட்டியலில் முதலிடம் பிடித்த சிங்கப்பூரர்கள் பெட்ரோல் பங்குகளில் RON95- ஐ நிரப்புகிறார்கள்.