புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான தமிழ்நாடு அரசின் இணையதள சேவை தொடக்கம்!

Photo: TN GOVT

டிசம்பர் 7- ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான தமிழ்நாடு அரசின் ‘மறுவாழ்வு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே வாழும் தமிழர் நல ஆணையரகத்தின்’ இணையதள சேவையை தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

அதிஉயரிய கௌரவமிக்க சிங்கப்பூர் S Pass வாங்க பெற்றிருக்க வேண்டிய தகுதிகள்!

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புலம்பெயர்ந்த தமிழர்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்த நிலையில், புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்களிப்பினை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 12- ஆம் தேதி அன்று ‘புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக’ கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் வரும் 12/01/2022 மற்றும் 13/01/2022 இரண்டு நாட்கள் ‘புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாள்’ சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயரினைப் பதிவு செய்யும் பொருட்டும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்கள், அவர்களது பிரச்சனைகளுக்கான தீர்வுகள் போன்றவற்றை அறிந்து கொள்ளும் பொருட்டு ‘மறுவாழ்வு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே வாழும் தமிழர் நல ஆணையரகத்தின்’ இணையதளத்தை https://nrtamils.tn.gov.in தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.செஞ்சி மஸ்தான் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக டிசம்பர் 7- ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார்.

‘ரிஸ்க்’ நாடுகள் பட்டியலில் இருந்து சிங்கப்பூரை நீக்கியது இந்தியா!

இந்த நிகழ்வின் போது, மறுவாழ்வு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே வாழும் தமிழர் நல ஆணையரகத்தின் ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் இ.ஆ.ப., செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஜெயசீலன் இ.ஆ.ப., மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர். இவ்வாறு தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.