“புக்கிட் பாத்தோக் நூலகம் தற்காலிகமாக மூடப்படுகிறது”- தேசிய நூலக வாரியம் அறிவிப்பு!

"புக்கிட் பாத்தோக் நூலகம் தற்காலிகமாக மூடப்படுகிறது"- தேசிய நூலக வாரியம் அறிவிப்பு!
Google Image

 

புக்கிட் பாத்தோக் நூலகம் (Bukit Batok) வரும் டிசம்பர் மாதம் 31- ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக தேசிய நூலக வாரியம் அறிவித்துள்ளது.

வாளை வைத்து பாட்டிலை துண்டாக்கும் காணொளி வெளியிட்ட ஆடவர் – நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டு

இது குறித்து தேசிய நூலக வாரியம் (National Library Board- ‘NLB’) இன்று (அக்.30) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 1998- ஆம் ஆண்டு வெஸ்ட் மால் (West Mall) திறக்கப்பட்டது. அந்த மாலில் தேசிய நூலக வாரியத்திற்கு சொந்தமான நூலகமும் திறக்கப்பட்டிருந்தது. இந்த நூலகத்துக்கு நாள்தோறும் 200- க்கும் மேற்பட்டோர் வந்து, நூல்களைப் படித்துப் பயனடைந்து வருகின்றனர்.

Google Photo

தற்போது வெஸ்ட் மால் முழுவதும் மேம்படுத்தப்படவுள்ள நிலையில், அதனுடன் இருக்கும் நூலகமும் மேம்படுத்தப்படவுள்ளது. தற்போது உள்ள அளவை விட இரண்டு மடங்காக நூலகம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அதி நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. எனவே, இந்த நூலகம் வரும் டிசம்பர் 31- ஆம் தேதியுடன் தற்காலிகமாக மூடப்படுகிறது. இந்த நூலகம் மேம்படுத்தப்பட்டு, வரும் 2025- ஆம் ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும். வாசகர்களுக்கு மேம்படுத்தப்பட்ட நூலகம் பயனுள்ளதாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய நடைமுறைகள்.. வேலையிடங்களில் முறையாக பின்பற்றப்படுகிறதா?

புக்கிட் பாத்தோக் நூலகம் தற்போது 1,279 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூலகம் மூடப்படுவதால் வாசகர்கள் கவலையடைந்துள்ளனர்.