சிங்கப்பூரின் VTL பயண ஏற்பாடு என்றால் என்ன? – விவரம்

(Photo: Reuters)

தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயண திட்டம் (VTL) மூலம் பயணிகள் தனிமைப்படுத்தப்படாத பயணத்தை மேற்கொள்ள முடியும்.

முன்னர் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் தனிமை காலம் என்பது நாட்டை பொருந்து வழங்கப்பட்டு வந்தது, ஆனால் தற்போது அது தேவை இல்லை.

சிங்கப்பூரில் ஏற்றுக்கொள்ளப்படும் தடுப்பூசி சான்றுகள் – VTP போர்ட்டலில் எதைப் பதிவேற்றலாம்?

இருப்பினும், தற்போது குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டுமே சிங்கப்பூர் VTL ஏற்பாட்டை செய்துள்ளது.

அதாவது ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, தென் கொரியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, UK மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு VTL கீழ் தனிமை இல்லாமல் பயணங்களை மேற்கொள்ளலாம்.

கூடுதலாக, இந்தியா, இந்தோனேசியாவிலிருந்து VTL விமானங்கள் 29 நவம்பர் முதல் தொடங்கும், அதே போல் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உள்ளிட்ட நாடுகளுக்கு 6 டிசம்பர் முதல் சேவை தொடங்கும்.

சிங்கப்பூரில் இருந்து இந்த நாடுகளுக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானத்தில் (குறிப்பிட்ட தேவைகளைக் கொண்ட ஆஸ்திரேலியாவுக்கான விமானங்களைத் தவிர) பயணம் செய்யலாம்.

அதே சமயம் இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குப் பரிந்துரைக்கப்பட்ட VTL விமானங்களில் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

மேலும், ஒரே பயணத்தில் பல VTL நாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதி வழங்கபடுகிறது.

வெளிநாட்டு பயணிகளுக்கான VTP அனுமதி விண்ணப்ப போர்டல் – தற்போது சீராக இயங்குகிறது!