வாட்ஸ்அப் மூலம் இந்த வேலையில் ஈடுபட்டால் தண்டனை உறுதி – சிக்கிய 22 பேர்

(Photo : ABC)

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட இருந்த சட்ட அமலாக்க நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வாட்ஸ்அப்பில் பகிர்ந்ததாக சொல்லப்படும் கும்பல் சிக்கியுள்ளது.

சட்ட நடவடிக்கைகளை வேண்டுமென்றே தடுத்ததாக மொத்தம் 22 பேர் கொண்ட குழு மீது இன்று (ஜூலை 6) குற்றம் சாட்டப்பட உள்ளது.

உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வாணம்… சாலையில் செல்வோரிடம் தொல்லை – மடக்கி பிடித்த போலீஸ் (Video)

அவர்கள் 27 மற்றும் 49 வயதுக்குட்பட்ட ஆடவர்கள் என்றும், அவர்கள் ஜனவரி 2019 மற்றும் பிப்ரவரி 2020க்கு இடையில் நான்கு வாட்ஸ்அப் அரட்டை குழுக்களுக்கு அந்த செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

அதனால் அமலாக்க நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க அரட்டைக் குழுக்களின் மற்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் உதவியதாக கருதப்படுகிறது.

அதாவது அமலாக்க நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்கு அருகில் உள்ள குற்றாவளிகளை அதிகாரிகளிடம் இருந்து காப்பாற்றும் நோக்குடன் இந்த தகவல் பரிமாற்றம் இருந்ததாக சொல்லப்படுகிறது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

“உயிரிழந்த ஊழியர்களுக்கு 2 வருட அனுபவம் உள்ளது…” MOM கூற வரும் செய்தி என்ன?