சிங்கப்பூரில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட நிறுவனத்துக்கு S$20,000 அபராதம்

siong_hong_seafood_enterprise

உரிமம் இல்லாத குளிர்பதன இடத்தில் இறைச்சி மற்றும் கடல் உணவுப் பொருட்களை சேமித்து வைத்ததற்காக நிறுவனம் ஒன்றுக்கு S$20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) தெரிவித்துள்ளது.

உட்லண்ட்ஸில் உள்ள சியாங் ஹாங் என்ற கடல் உணவு நிறுவனம், குளிர்பதன உரிமம் இல்லாமல் செயல்பட்டதாக SFA கூறியுள்ளது.

குறுகிய வடிகாலில் தவறி விழுந்த ஆடவர் (Video).. 30 நிமிடங்கள் போராடி மீட்ட SCDF

சட்டவிரோதமாக சுமார் 7,200 கிலோ உணவு பொருட்களை அது சேமித்து வைத்ததாக கூறியுள்ளது SFA.

கடந்த ஆண்டு ஆகஸ்டு 25 அன்று அந்த உணவுப் பொருட்கள் SFA அமைப்பால் கைப்பற்றப்பட்டது.

உரிமம் இல்லாத இடங்களில் இறைச்சி மற்றும் கடல் உணவுகளை சட்டவிரோதமாக சேமித்து வைப்பது உணவு பாதுகாப்புக்கு அபாயத்தை ஏற்படுத்தும் என SFA தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தொற்று காரணமாக மேலும் 18 பேர் இறந்துள்ளதாக அறிவிப்பு