மலேசியர்களை ஈர்க்கும் சிங்கப்பூர் – என்னவெல்லாம் காரணம் என்று தெரியுமா !

malaysians in singapore

லட்சக்கணக்கான மலேசியர்கள், நல்ல சம்பளம், நல்ல நாணயமதிப்பு, அதிக வேலைவாய்ப்புகள் மற்றும் சிறந்த வாழ்க்கை முறை காரணமாக சிங்கபூரில் பணிபுரிகின்றனர்.

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் மலேசியர்களின் தற்போதைய எண்ணிக்கை 900,000 ஆகும், இது முன்னர் இருந்த 400,000 எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே தினசரி கணிசமான எண்ணிக்கையில் வேலைக்காக பயணிக்கின்றனர் என்றும் மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு MEFஇன் தலைவர் சையத் ஹுசைன் சையத் ஹுஸ்மான் கூறியுள்ளார்.

உலக நாடுகளின் பொருளாதாரங்களை நாசமாக்கிய கொரோனா தொற்றுநோயால் பல மலேசியர்கள் நாட்டின் பொருளாதார மீட்சியின் மத்தியில் வேலை செய்ய எல்லைகளைத் தாண்டுவதை மீண்டும் தொடங்குவதால் மலேசியா தனது திறமையை இழந்து வருகிறது என்பது வருத்தத்திற்குரிய விஷயம் ஆகும்.

சிங்கப்பூரில் நல்ல வருமானத்தைப் பெறுகிறார்கள், மேலும் அவர்கள் ஓய்வுபெறும் போது போதுமான சேமிப்பை இது உறுதிபடுத்துகிறது என்றும் சிங்கப்பூரில் உள்ள மேம்பட்ட தொழில்களில் பணிபுரியும் வாய்ப்பு மலேசியர்களுக்கு மிகவும் நல்லது, மேலும்அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச பதவிகளையும் பெறுகிறார்கள் என்றும் சையத் ஹுசைன் கூறினார்.

மலேசியர்கள் சிங்கப்பூருக்குச் செல்வதற்கு, அதிக சம்பாதிப்பதைத் தாண்டி, பல்வேறு உள்நாட்டு காரணிகளே அதன் குடிமக்களை வெளியேற்றுகின்றது. பணவீக்கம் மற்றும் ரிங்கிட்டின் மதிப்பு குறைந்து வருவது போன்றவை முக்கியமான காரணிகள் ஆகும்.