பொங்கோலில் இருவரைத் தாக்கி பிடிபட்ட காட்டுப்பன்றி

Wild boar caught in Punggol
(Photo: Facebook/Sun Xueling)

பொங்கோலில் பெண் மற்றும் அவருக்கு உதவ முயன்ற NParks அதிகாரியை தாக்கிய காட்டுப்பன்றி நேற்று (பிப்ரவரி 26) பிடிபட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுன் ஷுவெலிங் (Sun Xueling) கூறுகையில், குடியிருப்பாளர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் பொங்கோல் சீஸ் மற்றும் Ecopolitan பகுதியில் காட்டுப்பன்றியைக் கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இரண்டாவது குழந்தைக்கு இனி கூடுதல் நிதி உதவி..!

அதை அடுத்து, இப்பகுதியைப் பாதுகாக்க தடுப்பு அமைக்கப்பட்டது என்றும் அவர் பேஸ்புக்கில் கூறினார்.

மேலும் காவல்துறை, NParks மற்றும் அதன் ஒப்பந்தக்காரர்கள் அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பின்னர், காட்டுப்பன்றி ஒரு பெண்ணைத் தாக்கியதாகவும், அதிகாரிகள் அதை துரத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

காட்டுப்பன்றியை அதிகாரிகள் துரத்தியதால் அந்தப் பெண்ணை பாதுகாக்க முடிந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகள் அதை திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபடும் போது, ஒரு அதிகாரியை காட்டுப்பன்றி தாக்கியது.

அந்தப் பெண்ணுக்கும் அதிகாரிக்கும் சிறிய அளவிலான காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரை தாக்கியவருக்கு சிறைத்தண்டனை!