காட்டுப்பன்றி தாக்கி இருவர் பாதிப்பு.. தேடிப் பிடிக்க 20 பேர் கொண்ட குழு தீவிரம்!

20 men activated to look for wild boar
(Photo: Sun Xueling/Facebook)

கடந்த சனிக்கிழமை (பிப். 20) காட்டுப்பன்றி தாக்குதலைத் தொடர்ந்து, அவற்றை தேடிப் பிடிக்க 20 ஆண்கள் கொண்ட குழு அனுப்பப்பட்டுள்ளதாக பொங்கோல் வெஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சுன் ஷுவெலிங் தெரிவித்தார்.

பொங்கோலில் காட்டுப்பன்றியால் காயமடைந்த இரு நபர்களுக்கு திருமதி சுன் தன்னுடைய அனுதாபத்தை பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

இனி திருச்சி – சிங்கப்பூர் இடையே தினசரி விமானங்களில் பறக்கலாம்!!

மேலும், அவர்கள் இருவரும் விரைவில் குணமடைவார்கள் என்றும், அந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள் என்றும் நம்புவதாக அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படைக்கு (SCDF) இரண்டு தனித்தனி அழைப்புகள் வந்ததாகக் கூறியுள்ளது.

முதலாவது இரவு 9.10 மணியளவில் 308B Punggol Walk-லும், இரண்டாவது இரவு 9.30 மணிக்கு 310A Punggol Walk-லும் அழைப்புகள் வந்ததாகக் அது கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட இருவரையும் செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக SCDF தெரிவித்துள்ளது.

இதுபற்றி NParks மற்றும் காவல்துறையினருடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அவைகள் நாள் முழுவதும் சம்பவம் தொடர்பான புதுப்பிப்புகளை வழங்கியதாகவும் அவர் கூறினார்.

காட்டுப்பன்றி, குடியிருப்பாளர்களின் அருகில் நெருங்காமல் இருப்பதை உறுதி செய்ய தொடர்ந்து தேடிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காட்டுப்பன்றிகளைக் கண்டால், 1800-476-1600 என்ற தேசியப் பூங்காக் கழகத்தின் எண்ணை தொடர்புகொண்டு புகார் செய்யலாம்.

வசதி குறைந்த குடியிருப்பாளர்களுக்கு உதவிகளை வழங்கிய ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயம்!