பாஸ்போர்ட் இல்லாத காட்டுப்பன்றி… சிங்கப்பூர் to ஜோகூர் வரை நீந்தி பயணம் – “VTL சேவைக்கே சவால்” என பலர் நகைச்சுவை

சிங்கப்பூர்-ஜோகூர் இடையே அமைந்துள்ள கடல் பகுதியில் காட்டுப்பன்றி ஒன்று நீந்திக் கொண்டிருந்த சம்பவம் வீடியோவில் பிடிபட்டது.

இந்த துணிச்சலான முயற்சி அடங்கிய வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் நகைச்சுவையான பேசுபொருள் ஆனது.

பாசிர் குடாங் தொழிற்சாலையில் தீ வெடிப்பு… சிங்கப்பூர் வரை தென்பட்ட தீப்பந்து!

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான VTL ஏற்பாட்டை முறியடிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளதாக பலர் சிரிப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழன் (பிப். 24) அன்று Facebook பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.

பாலூட்டியின் நம்பிக்கை வாய்ந்த துணிச்சலான நீச்சல் திறன் காரணமாக இந்த வீடியோ 120,000 பார்வைகளை கடந்துள்ளது.

சிங்கப்பூர் மற்றும் ஜோகூர் இடையே உள்ள தூரம் அதிகபட்சமாக 4.8 கிமீ வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

“VTL டிக்கெட் கிடைக்கவில்லை அதனால் வேறு வழியில்லாமல் நீந்தி செல்கிறது” என பலர் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Work pass அனுமதியில் வேலை பெற தந்திரமாக செயல்பட்ட வெளிநாட்டு ஊழியருக்கு சிறை – 19 ஊழியருக்கு நிரந்தர தடை