காட்டுப்பன்றி மீது மோதியதில் காயமடைந்த 64 வயது ஆடவர்! – பின்னால் வந்த வாகன ஓட்டி உதவ முயற்சி

Wild boars feeding fined
(Photo: iStock)
சிங்கப்பூரின் அப்பர் புக்கிட் திமா சாலையில் இருசக்கர வாகனம் மோதியதில்,வாகன ஓட்டிக்கும் குறுக்கே வந்த காட்டுப்பன்றிக்கும் காயம் ஏற்பட்டது.பலத்த காயமடைந்த வாகன ஓட்டிக்கு உதவ அவருக்குப் பின்னால் ஓட்டிச் சென்ற ஒருவர் உதவி வழங்க முயற்சித்தார்.
மோட்டார் சைக்கிள் மோதியதில் காட்டுப்பன்றியின் மூக்கைச் சுற்றியுள்ள பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.ரத்தத்துடன் சாலையில் வீழ்ந்து கிடந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8:40 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு உதவி கோரி அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது.விபத்துக்குள்ளான 64 வயதான ஆண் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வனவிலங்குகள் ஏதேனும் விபத்துகளிலோ அல்லது பொது இடங்களிலோ சுற்றித் திரிவதைக் கவனிக்கும் பொதுமக்கள் உடனடியாக ACRES அமைப்பின் 24 மணி நேர வனவிலங்கு மீட்பு ஹாட்லைன் 9783 7782 அல்லது தேசிய பூங்காக்கள் வாரியம் (NParks) 1800 476 1600 என்ற எண்ணில் ஆலோசனை மற்றும் உதவிக்கு அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.