“அனைத்து பக்தர்களுக்கும் தைப்பூச வாழ்த்துகள்”- சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ட்வீட்!

Photo: Singapore Prime Minister Official Facebook Page

தைப்பூசத் திருநாளையொட்டி, சிங்கப்பூரில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் இன்று (18/01/2022) வழக்கமான உற்சாகத்துடன் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. முருகனுக்கு அபிஷேகங்களும், விஷேச பூஜைகளும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் நேற்று (17/01/2022) இரவு முதலே கோயிலுக்கு பால் குடங்களை எடுத்து வரத் தொடங்கின. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் விமானங்களில் 6,00,000 பேர் பயணம்!

இந்த நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “வீரம், நல்லொழுக்கம் மற்றும் சக்தியின் அடையாளமாக விளங்கும் முருகப்பெருமானுக்கு நன்றி செலுத்தும் புனித திருவிழாவான இன்று தைப்பூசம். இந்த நாளில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி, நேர்த்திக்கடன் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வழிபாடு செய்கின்றனர்.

தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு கொண்டாட்டம் மீண்டும் வித்தியாசமாக இருக்கும். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் இது இருந்தபோதிலும், பக்தர்கள் தங்கள் சொந்த வழிகளில் தங்கள் பக்தியைக் காட்ட மாற்றங்களைச் செய்வதன் மூலம், திருவிழா அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு பால் குடம் சுமந்து வந்த சிங்கப்பூர் துணை பிரதமர்!

அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் அர்த்தமுள்ள தைப்பூச வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.