“Class 3” ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய நபர் – மடக்கி பிடித்தது போலீஸ்

வெளிநாட்டு ஊழியரை

முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய நபர் ஒருவருக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் பார்சல்களை டெலிவரி செய்ய வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

போலீசார் துரத்தியவுடன், 33 வயதான ரிசுவான் ரோஹ்மட் என்ற அவர் கார் பார்க்கில் வண்டியையும், தனது குடும்பத்தை வேனுக்குள் விட்டுவிட்டு தப்பி ஓடியதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு அபராதம் மற்றும் ஐந்து வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரிசுவானிடம் தற்காலிக ஓட்டுநர் உரிமம் மட்டுமே இருந்தது, இது கற்றல் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படுகிறது.

அவர் Class 3 மற்றும் Class 3A உரிமம் இல்லாமல் டெலிவரி வண்டி ஓட்டியது தெரியவந்தது.