சிங்கப்பூர் தெருக்களில் கிடக்கும் குப்பைகளை இரண்டு குழந்தைகளுடன் சுத்தம் செய்த பெண்!

பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன், லோரோங் 29 கெய்லாங் தெருக்களில் கிடக்கும் குப்பைகளை எடுப்பதை காண முடிந்தது.

பெண்ணின் இந்த சமூக அக்கறை உள்ள செயல் முற்றிலும் தன்னார்வமான செயலாகத் தெரிகிறது.

மோட்டார் சைக்கிள்-கார் விபத்து: நேரில் கண்ட சாட்சியை தேடும் குடும்பம்

பொது இடத்தில் கிடக்கும் குப்பைகளை தானாக முன்வந்து எடுத்ததற்காக அந்தப் பெண்ணும் இரண்டு குழந்தைகளும் வலைதள வாசிகளால் பாராட்டப்பட்டனர்.

தாயாக கருதப்படும் அந்த பெண், பொது வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி தனது இரண்டு குழந்தைகளுக்கும் சரியான பாடத்தை கற்றுக்கொடுப்பதாக பலர் பாராட்டினர்.

இவர் சிறந்த பெற்றோருக்கு உதாரணம் என்றும் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

நாட்டு நலன் கொண்ட இந்த செயல், பொதுமக்களால் வீடியோ எடுக்கப்பட்டு நேற்று (நவம்பர் 20) டிக்டோக்கில் வெளியிடப்பட்டது.

இந்த காணொளி பின்னர் பேஸ்புக்கிலும் அனைவராலும் பகிரப்பட்டது.

காணொளி ஒரு நாளுக்குள் சுமார் 100,000 முறை பார்க்கப்பட்டது.

ஊழியர்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக 235 மினிபேருந்துகள்: முன்பதிவு செய்ய நிறுவனங்கள் முன்வருமா?