தகாத சேவை, மிரட்டி பணம் பறிப்பும் செய்த பெண்ணுக்கு கடும் எச்சரிக்கை

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில்

பாலியியல் சேவை வழங்கியதாகவும், ஆடவரை மிரட்டி பணம் பறித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட பெண் மீதான அந்த குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், 27 வயதான தன்யா பால் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தமிழ்நாட்டு ஊழியரின் அரிய வெற்றி.. முதலாளிக்கு எதிராக வழக்கு – நஷ்டஈடு பெற்று சாதனை

மேலும், அந்த சிங்கப்பூர் பெண் மீது மீண்டும் அதே குற்றச்சாட்டை சுமத்த முடியாது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் ஏன் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.

தன்யா ஆடவர் ஒருவரை மிரட்டி பணம் பறித்ததாக கடந்த மார்ச் 8 அன்று குற்றம் சாட்டப்பட்டது.

யுஷூன் குடியிருப்பில் மார்ச் 5 ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் அவர் ஆடவரை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதாவது $1,800 பணத்தை கொடுக்காவிட்டால், போலீசில் புகார் கொடுக்கப் போவதாக 39 வயதுமிக்க ஆடவரை தான்யா மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்ற ஆவணங்களில் அச்சுறுத்தல் பற்றிய விவரங்களை ஏதும் வெளியிடவில்லை.

மிரட்டி பணம் பறிக்கும் குற்றவாளிக்கு இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம். ஆனால், பெண்களுக்கு பிரம்படி கிடையாது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

செப். 1 முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் – இந்திய ஊழியர்களுக்கு ஹோட்டல் துறையில் வேலை அனுமதி