சிங்கப்பூரில் ஆண் போல் பேசி நாடகமாடிய பெண்; சுமார் S$2,90,000 இணைய காதல் மோசடி!

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில்

சிங்கப்பூரில் உள்ள ஷாகி உணவகத்தின் முன்னாள் இயக்குநரான நூருல் அயின் அப்துல் ஷுகூர் என்ற 47 வயது பெண், இணைய காதல் மோசடி மூலம் சம்பாதித்த சுமார் 2,90,000 வெள்ளியை வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 01) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நூருல் அயின், கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் மூன்று சம்பவங்களில் அந்தத் தொகையைப் பெற்றுக்கொண்டதாகவும், அது குற்றவியல் நடத்தை மூலம் சம்பாதித்த தொகை என சந்தேகிக்கப்படுவதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

பணம் எங்கிருந்து கிடைத்தது என்பதற்கு உரிய விளக்கம் தரவில்லை என கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கடந்த 2020 டிசம்பரில், இணையக் காதல் மோசடி மூலம் பணத்தை இழந்த 48 வயது பெண் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

பாதுகாப்பு நடைமுறையை மீறிய 2 இந்திய வம்சாவளி ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

இதையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பெண் ஒருவர் ஆன்லைனில் ஆண் கதாபாத்திரத்துடன் நட்பாக பழகியது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பார்சல் ஒன்றை அனுப்பி இருப்பதாக முதலில் கூறினார்.

பின்னர், அந்த பார்சல் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அதை வெளியிடுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. சிங்கப்பூர் சுங்க துறைக்கு கட்டணம் செலுத்தி அதைப் பெற்றுக்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை நம்பி 16,000 வெள்ளியை இழந்ததாகவும், மீண்டும் பணம் செலுத்தும்படி தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் புகாரளித்துள்ளார். இதுமட்டுமின்றி, மற்றொரு 58 வயது பெண், சுமார் 2,74,000 வெள்ளியை செலுத்தியதும் தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள நூருல் அயின், தற்போது 15,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு வரும் மார்ச் 22ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

வெளிநாட்டு பணிப்பெண்கள், பிற Work permit உடையோருக்கு ஆறு மாத மருத்துவப் பரிசோதனை நிறுத்தி வைப்பு!