ஜாகிங் சென்ற பெண் நீர்நாய்கள் துரத்தவும் உசைன் போல்ட் போல அலறியடித்து ஓட்டம் !

otters

சிங்கப்பூரில் நீர்நாய்கள் நமது அதிகாரப்பூர்வமற்ற தேசிய சின்னங்களாக மாறிவருகிறது. அவைகள் அழகாக இருந்தாலும், பெரிய உயிரினங்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டவைகள் என்பதால் நாம் சற்று கவனத்துடனே இருக்க வேண்டும். வெஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நீர்நாய்களால் துரத்தப்பட்ட ஒரு துரதிர்ஷ்டவசமான பெண்ணுக்கு அது நடந்துள்ளது.

ஜூலை 22 மாலை 6 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் ஜாகிங் செய்பவர்கள் நீர்நாய்களிடம் விழிப்புடன் இருக்கும்படி எச்சரித்துள்ளார். 48 வயதான நேரில் பார்த்த சாட்சியான Lu Xiufeng என்பவர் வெஸ்ட் கோஸ்ட் பூங்காவில் தனது குழந்தைகளுடன் உலா வந்ததாக கூறியுள்ளார். அப்போது ஆறு முதல் ஏழு நீர்நாய்கள் ஒரு பெண்ணை துரத்தும் திடுக்கிடும் காட்சியைக் கண்டார்.

அந்தப் பெண் துரத்தப்பட்டபோது, அவளின் அலறல் சத்தம் கேட்டது.அங்கே 10 பேர் அருகில் இருந்தபோதும், ​​யாரும் அந்தப் பெண்ணுக்கு உதவத் முன்வரவில்லை. காணரம், எந்த நேரத்திலும் தங்களை நோக்கி வந்து விடுமோ என்ற அச்சமே !

இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றாலும், அது முற்றிலும் எதிர்பாராதது அல்ல. எந்த ஒரு உயிரினமும், பல மடங்கு அளவுள்ள மற்றொரு விலங்கு, தங்கள் திசையில் விரைவாக நகரும் போது அச்சுறுத்தலை உணரும்.

சிங்கப்பூரர்கள் பொதுவாக நீர்நாய்களை விரும்பினாலும், அவை இன்னும் காட்டு விலங்குகளாகவே கருதப்படுவதால், தேசிய பூங்கா வாரியம் NParksஇன் வழிகாட்டுதல்களை மனதில் கொண்டு நாம் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும்.