வேலை முடிந்து பேருந்துக்காகக் காத்திருந்த பெண் ஊழியர்… திடீரென காயத்துடன் கீழே விழுந்த அதிர்ச்சி – என்ன நடந்தது குழப்பத்தில் புலம்பும் குடும்பம்

Shin Min Daily News

தன்னுடைய வேலை முடிந்து வீட்டிற்குச் செல்ல பேருந்துக்காகக் காத்திருந்த 34 வயதுடைய பெண் ஊழியர் ஒருவர், அடுத்த கணமே எதிர்பாராத விதமாக காயமடைந்து மயங்கி தரையில் கிடந்தார்.

கடந்த வியாழன் (ஏப்ரல் 14) அன்று ஜாலான் பூன் லேயில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நடந்த சம்பவத்தில், அந்த பெண்ணுக்கு, “வீல் சோக்” பறந்து தலையில் தாக்கியதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

வீல் சோக் என்பது பொதுவாக வாகனங்களின் சக்கர இயக்கத்தைத் தடுக்க வைக்கப்படும் ஒரு பொருளாகும்.

“நான் இனி பயணிக்க விரும்பவில்லை … ஒருவேளை மற்றொரு தொற்றுநோய் அபாயம் ஏற்படலாம்” அஞ்சி நடுங்கும் வெளிநாட்டு ஊழியர்கள்!

இந்த சம்பவம் வியாழன் பிற்பகல் 12.12 முதல் 12.40 மணி வரை நடந்ததாக நம்பப்படுகிறது.

ஆனால் அவரின் குடும்பம் இன்னமும், அவருக்கு என்ன ஆனது என்று குழப்பத்தில் உள்ளனர்.

“எனது பாசமிக்க உறவினரின் காதின் இடது பக்கம் பறக்கும் சக்கரம் (???) அடித்து தாக்கியது” என்று அவரின் உறவினர் கூறினார்.

பலமான தாக்கத்தின் காரணமாக பெண் வலதுபுறத்தில் விழுந்தார் என்றும், அவரின் முகத்தின் இருபுறமும், மேலும் காதுகள், கண்கள் மற்றும் கழுத்துகளில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு உள் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாக உறவினர் கூறினார். “இரண்டு நாட்கள் ஆகிவிட்டன, அவர் இன்னும் ICUவில் தான் இருக்கிறார்.”

இப்போது வரை, அவர் எப்படி காயப்பட்டிருப்பார் என்று ஓர் சிறிய துப்பு கூட இல்லாமல் குடும்பத்தினர் உள்ளனர் என்று அவரின் சகோதரர் கூறினார்.

AYE விரைவுச்சாலையில் கோர விபத்து – பரிதாபமாக உயிரிழந்த ஓட்டுநர்; தகவல் கோரும் குடும்பம்!