“சிங்கப்பூரில் ஒன்றும் இல்லை.. அங்கு வாழ்க்கை நடத்த முடியாது..” என்று கூறிய சிங்கப்பூர் பெண் – கொதிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட பலர்

woman-says-she-dont-like-singapor
TikTok/@Brandondior1

“சிங்கப்பூரில் சிறந்தது என்ன” என்ற தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு சிங்கப்பூர் பெண் ஒருவர் அளித்த பதில் அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக்கில் வெளியான இந்த வீடியோவில் வெளிநாட்டவர்கள் உட்பட சிலர் கோபத்துடன் கருத்து தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் அக். முதல் வரும் மாற்றங்கள்: வெளிநாட்டு ஊழியர்கள், வேலை, குற்றப்புள்ளிகள் – முழு தொகுப்பு

அந்த வீடியோ கடந்த செப். 27 அன்று @Brandondior1 என்ற பயனரால் பதிவேற்றப்பட்டது.

வீடியோவில், தாம் சிங்கப்பூரை சேர்ந்தவர் என சொல்லிக்கொள்ளும் அந்த பெண்ணிடம் நேர்காணல் செய்பவர், “(உங்கள்) நாட்டில் சிறந்த விஷயம் என்ன?” என்று கேட்கிறார்.

அதற்கு அந்தப் பெண், “ஒன்றுமில்லை” என்று பதிலளித்தார். பின்னர், “ஒன்றுமில்லையா?” என Brandondior1 அதிர்ச்சியுடன் மீண்டும் கேட்கிறார்.

அதற்கு, “எனது நாட்டில் எனக்கு எதுவும் பிடிக்கவில்லை” என்று அந்தப் பெண் மேலும் கூறினார்.

“சிங்கப்பூருக்கு இதுவரை செல்லாத” நபர்களுக்கு ஒரு செய்தியைக் கொடுக்கும்படி நேர்காணல் செய்பவர் கேட்டபோது, ​​​​அந்தப் பெண் கூறியதாவது;

“விடுமுறையை கழிக்க அங்கு சென்றால் பரவாயில்லை. ஆனால், நீங்கள் வாழ்வதற்காகவும் நிரந்தரமாக தங்குவதற்காகவும் அங்கு செல்ல நினைத்தால், அதைச் செய்யாதீர்கள் ” என்று அதிர்ச்சியாக கூறியுள்ளார்.

சிங்கப்பூர் பற்றி அந்த பெண் கூறிய கருத்துக்கு பலரும் கொதிப்படைந்துள்ளனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் சிங்கப்பூருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதில் பெரும் ஆதரவு சிங்கப்பூரர்கள் மற்றும் சிங்கப்பூரில் வாழும் மக்களிடமிருந்து இருந்து வருகிறது.

“சிங்கப்பூரில் நான் 10 வருடமாக வேலை பார்க்கிறேன்.. சிங்கப்பூர் அர்புதமாக ஓர் நாடு., நான் ஒரு பிலிப்பைன் நாட்டவர் இருந்தாலும் எனக்கு சிங்கப்பூர் இரண்டாம் தாய் நாடு” என்று பணிப்பெண் ஒருவர் கூறியுள்ளார்.

அதில் ஒருவர் அந்த பெண் உண்மையான சிங்கப்பூரரே இல்லை என்றும், மொழி உச்சரிப்பு முறை கூட சிங்கப்பூரரை போல இல்லை என்றும் கூறியுள்ளார்.

அதிக அளவில் படையெடுத்த வெளிநாட்டு ஊழியர்கள் – சட்டென்று எகிறிய சிங்கப்பூர் மக்கள்தொகை