கைது செய்யப்பட்ட தாயும் மகனும் ஜாமீனில் விடுவிப்பு – சிங்கப்பூரர் என்று காவல்துறையினர் உறுதிபடுத்தியது சரியா?

woman-son-licence-plucking-arrested-released
Tuas Second Link சாலையில் லைசென்ஸ் அட்டையை பறிக்கும் சாலை சம்பவத்தில் ஈடுபட்ட தாய்-மகன் இருவரும் ஜோஹோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.பின்னர் ஜாமீனில் அவர்கள் வெளியே வந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மலேசியாவின் இரண்டாவது இணைப்பின் பக்கத்தில் அமைந்துள்ள சுல்தான் அபுபக்கர் குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் ஜூலை 14 அன்று தாயும் மகனும் கைது செய்யப்பட்டனர்.
இஸ்கந்தர் புத்தேரி மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரி ரஹ்மத் ஆரிஃபின்,அந்தத் தாயும் மகனும் ஜாமீனில் வெளியேறி சிங்கப்பூர் திரும்பியுள்ளதாகக் கூறினார்.அவர்கள் எப்போது விடுவிக்கப்பட்டனர் அல்லது எத்தனை நாட்கள் பிடித்து வைக்கப்பட்டனர் என்பது குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை.மேலும் அவர்கள் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு குறித்த விசாரணை ஆவணங்கள் ஏற்கனவே,அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.ஜாமீனில் வெளிவரும் தாயும் மகனும் ,எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் மற்றும் நீதிமன்றத்திலிருந்து சம்மன் அனுப்பப்படும்போது ஆஜராக வேண்டும்.இல்லையெனில்,அவர்களுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப் படலாம்.
அந்த நபர் சிங்கப்பூரர் என்பதை மலேசிய காவல்துறை உறுதிப்படுத்தியது, ஆனால் அந்தப் பெண் மலேசியா அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசி என்பதை வெளியிட மறுத்துவிட்டார்.