சண்டையில் காரை பெண் மேல் ஏற்ற முயன்ற ஆண் – சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம் !

woman try to stop car

சிங்கப்பூரில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே கோபம் மூண்ட நிலையில், அந்த ஆண் காரில் புறப்பட்ட போது அந்த பெண் தடுக்க முயன்று தோல்வியுற்றார்.

ஆகஸ்டு 9 அன்று நடந்த இச்சம்பவத்தை TikTok பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு பெண் ஒரு ஆணிடம் சைகை செய்து அவனை நோக்கி நடந்துள்ளார். அதற்கு அந்த ஆண் குரலை உயர்த்தி பதிலளித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வெறும் ஒரு சென்டிமீட்டர் இடைவெளியில் முகத்தை வைத்துக்கொண்டு இருவரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டே இருந்துள்ளனர்.

அருகில் நிறுத்தப்பட்டிருந்த கறுப்பு நிற மெர்சிடிஸ் காரின் ஓட்டுநர் இருக்கையில் அந்த நபர் ஏற முற்பட்டபோது, ​​அந்தப் பெண்ணிடம் “இது சிங்கப்பூர், இது சீனா அல்ல!” என்று மாண்டரின் மற்றும் ஆங்கிலக் கலவையில் அந்த நபர் கூறியுள்ளார். பின்னர் அந்த பெண் காரின் முன் நின்று போன் செய்து மாண்டரின் மொழியில், தன்னை யாரோ இங்கே அடித்ததாகவும். சீக்கிரம் வருமாறும் கூறியுள்ளார்.

அந்த பெண் தொலைபேசியில் பேசிக்கொண்டே காரைத் தடுக்க முயலும் போது ஓட்டுநர் இருக்கையில் இருந்த ஆண் வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.

காரின் முன்பக்கம் நிற்க முயன்ற அந்த பெண், கார் வேகமாகச் சென்றதால் இறுதியில் காரின் முன்பக்க டயர்களுக்கு வெளியே கால்களை நகர்த்தவும், காயமில்லாமல் தப்பினார்.