டிப்டாப் உடையில் பிச்சை எடுத்த வெளிநாட்டு பெண்கள் 4 பேர் கைது

4 foreign women, aged 30-34, arrested in M'sia for begging money at Genting Highlands
Polis Bentong/Facebook

டிப்டாப் உடையில் ஒரு வயதான ஆடவரிடம் பிச்சை எடுத்த 4 வெளிநாட்டு பெண்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

மலேசியா, ஜென்டிங் ஹைலேண்ட்ஸில் பெண்கள் பிச்சை எடுப்பதைக் காட்டும் 23 வினாடி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

கட்டட ஊழியர்களுக்கு செம்ம வாய்ப்பு… ஜூன் மாதம் முதல் பயிற்சி – சம்பளம் உயரலாம்

வீடியோ எடுக்கும் நபர் அந்த ஆடவரை அணுகி, அந்தப் பெண்ணுக்கு பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் பெண் மோசடி செய்வதாகவும் கூறும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

“எங்களுக்கு சாப்பிட எதுவும் இல்லை” என்று கூறி பெண் பிச்சை எடுத்ததாகவும் அந்த முதியவர் கூறுகிறார்.

இதனை அடுத்து, 30 முதல் 34 வயதுக்குட்பட்ட நான்கு பெண் வெளிநாட்டவர்களைக் கைது செய்துள்ளதாக பெண்டாங் வட்டார காவல்துறை ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.

பிச்சை எடுத்து சலசலப்பை ஏற்படுத்தியது, நாடு கடந்த மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சந்தேகத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் TOTO லாட்டரியில் ChatGPT பயன்படுத்தி வென்று ஆச்சரியப்படுத்திய ஆடவர்