சிங்கப்பூர் விடுதலைப் பெற்றதிலிருந்து இதுவரை! – பாலினச் சமத்துவத்தினால் பெண்களின் முன்னேற்றம்

Honorary Citizen Awards

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் SHE BRILLIANCE அமைப்பின் ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசினார்.உரையின்போது பெண்களுக்கான வாய்ப்புகள் குறித்து பேசினார்.

பணியிடங்களிலும்,நிறுவனங்களின் உயர் பதவிகளிலும் பெண்களுக்குச் சமமான வாய்ப்புகளை வழங்க கூடுதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இது போன்ற அமைப்புகள்,பெண்களுக்கு ஆதரவளிக்கும் கட்டமைப்பில் முக்கியப் பங்காற்றுவதை அவர் சுட்டிக்காட்டினார்.சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை,நாட்டிலுள்ள பெண்கள் கணிசமான முன்னேற்றம் அடைந்திருப்பதாக அதிபர் ஹலிமா கூறினார்.

பாலினச் சமத்துவத்தில் உலகளவில் சிங்கப்பூர் 7ஆவது இடத்தில் உள்ளது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் 12ஆவது இடத்தில் இருந்ததை அவர் சுட்டினார்.

பெண்கள் அதிகளவில் தலைமைத்துவப் பொறுப்புகளைப் பெறுவதற்கு அவர்களின் திறனை வெளிக்கொணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்