குஜராத் சென்ற சிங்கப்பூர் துணை பிரதமர்: முதலமைச்சரை சந்தித்து பெருமிதம்

wong meet gujarat cm
MCI

இந்தியா சென்றுள்ள சிங்கப்பூர் துணை பிரதமர் லாரன்ஸ் வோங், குஜராத்துக்கு சென்றார். அங்கு அம்மாநில முதல்வர் பூபேந்திர பட்டேலைச் சந்துள்ளார் அவர்.

சிங்கப்பூர் மற்றும் குஜராத்துக்கும் நெருக்கமான, நீண்ட உறவு இருப்பதாக திரு வோங் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

பீச் ரோட்டில் ஆடவரை தாக்கிய சந்தேகத்தில் ஒருவர் கைது; காயங்களுடன் இருந்த ஆடவர் மருத்துவனையில் அனுமதி

தற்போதைய சந்திப்பில் இரு உறவுகளை மேலும் வலுப்படுத்தி கொண்டதாக அவர் கூறினார்.

குஜராத்தில் மிகப்பெரிய முதலீட்டு ஜாம்பவான்களில் சிங்கப்பூர் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐந்து நாள் பயணமாக, நேற்று முன்தினம் சனிக்கிழமை (செப். 17) முதல் வரும் செப். 21 புதன்கிழமை வரை இந்தியாவில் லாரன்ஸ் வோங் இருப்பார் என கூறப்பட்டுள்ளது.

புது தில்லியில் நடைபெறும் இந்தியா-சிங்கப்பூர் அமைச்சக வட்டமேசை (ISMR) தொடக்க விழாவில் திரு வோங் பங்கேற்பார் என்று பிரதமர் அலுவலகம் (PMO) முன்னர் தெரிவித்தது.

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ, அதனால் இறந்தாலோ நிறுவனங்கள் தான் பொறுப்பு – MOM அதிரடி அறிவிப்பு