திடீர் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் – 66 பேருக்கு அபராதம்

Woodlands Checkpoint emissions fine
National Environment Agency

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நேற்று திங்கள்கிழமை (நவ.28) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் 66 பேருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.

​​புகை வெளியேற்றம் உட்பட வாகனம் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மொத்தம் 66 பேர் பிடிபட்டனர்.

கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து ஊழியர் மரணம் – சமீபத்தில் மட்டும் 2 ஊழியர்கள் பலி

அவர்களில் 25 பேர் அதிக ஒலி ஏற்படுத்தியதற்காக பிடிபட்டனர், வாகன புகை கட்டுப்பாட்டு அளவை மீறியதாக 4 பேர் பிடிபட்டனர்.

மேலும் 24 பேர் முறையற்ற உரிமத் தகடுகள் போன்ற பொருத்தி இருந்ததாகவும், 13 பேர் முறையான உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியும், காப்பீடு இல்லாமல் இருந்ததாகவும் கண்டறியப்பட்டது.

திடீர் என நடந்த இந்த சோதனை வழக்கமாக தொடரும் என அதிகாரிகள் கூறினர்.

ஜூரோங் தீவில் வெளிநாட்டு ஊழியர் கடலில் விழுந்து பலி