வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியின் 7 அறையில் இடிந்து விழுந்த மேற்கூரை: 100 பேர் வெளியேற்றம் – ஊழியர்களின் நிலை?

Woodlands dormitory false ceiling collapses

உட்லண்ட்ஸில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் உள்ள 7 அறையில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தில் இரண்டு குடியிருப்பாளர்கள் சிறிய காயங்களுக்கு ஆளாகினர்.

அதாவது, நார்த் கோஸ்ட் லாட்ஜ் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் உள்ள ஏழு அறைகளின் மேற்கூரை இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்தி வருவதாக மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

வேலைக்காக வெளிநாடு செல்வோருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இது கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்றும் MOM கூறியுள்ளது. மிதமான நீர் கசிவால் இரண்டு அறைகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

MOM, காவல்துறை மற்றும் சிங்கப்பூர் ஆயுதப் படை குழு அதிகாரிகள் இந்த சம்பவத்தை தொடர்ந்து தங்குமிடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக MOM தங்குமிட ஆபரேட்டருடன் இணைந்து செயல்பட்டுவருவதாகவும் அது கூறியது.

காயமடைந்த இரண்டு ஊழியர்களும் சிகிச்சை பெற்றுள்ளனர். பாதிக்கப்பட்ட அறைகளில் பழுது நீக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அங்கு தங்கியிருந்த சுமார் 100 பேர், பாதிக்கப்படாத அறைகளுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

VIDEO: https://www.facebook.com/watch/?v=547051127189214

சிங்கப்பூரில் பாதிப்புள்ளாகும் இந்திய உணவகங்கள் – என்னதான் காரணம்?