உட்லண்ட்ஸ் பிளாட்டில் தீ… 15 பேர் வெளியேற்றம்; 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

MHA

லாரி ஓட்டுநர் ஒருவர் நேற்று (ஏப்ரல் 4) தனது மகளுடன் காலை உணவை வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார், அப்போது ​​தனது வீட்டுக்கு வெளியே உள்ள நடைபாதையில் சாம்பல் நிற புகை எழுவதை அவர் கண்டார்.

அதன் பின்னர் தரைத்தளத்தில் உள்ள தனது பக்கத்து வீட்டில் தீப்பிடித்ததை அவர் உணர்ந்துள்ளார்.

57 வயதான அவர், உட்லண்ட்ஸ் ரிங் ரோட்டில் அமைந்துள்ள பிளாக் 662ன் 2வது மாடியில் வசித்து வருவதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.

அடுக்குமாடி ஜன்னல் விளிம்பில் நின்றுகொண்டிருந்த மூதாட்டி… பதைபதைக்கும் காட்சி – கைது செய்த போலீஸ்

மேலும், “உடனே 995 எண்ணை அழைக்குமாறு தன் மகளிடம் கூறியதாகவும், மேலும் பக்கத்து வீட்டுக்காரர்களை வெளியேற சொல்வதற்காக அவர்கள் வீட்டு கதவுகளைத் தட்டியதாகவும் அவர் கூறினார்.

காலை 10.20 மணியளவில் தீ பற்றிய தகவல் வந்ததாகவும், தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் ஜெட் கருவி மூலம் தீயை அணைத்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

தரை தளத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி வீட்டின் படுக்கையறையில் உள்ள பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது.

அந்த பிளாக்கில் இருந்து சுமார் 15 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், இரண்டு பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

“இது என்ன உங்க தாத்தா வீட்டு சாலையா?” – சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ள வித்தியாசமான பதாகைகள்!