உட்லண்ட்ஸ் குடியிருப்பில் தீ விபத்து… 50 பேர் வெளியேற்றம்!

SCDF

உட்லண்ட்ஸில் உள்ள ஹவுசிங் போர்டு யூனிட்டில் இன்று (பிப்ரவரி 7) தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பிளாக்கில் இருந்த சுமார் 50 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இன்று மதியம் 1.25 மணியளவில் பிளாக் 688F உட்லண்ட்ஸ் டிரைவ் 75ல் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர், குழந்தைகள் 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

அதிகாரிகள் வந்தபோது 14வது மாடியில் உள்ள வீட்டின் படுக்கையறையில் தீ எரிந்து கொண்டிருந்தது என்று SCDF பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

பின்னர் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த தீயணைப்பு வீரர்கள் நீர் ஜெட் இயந்திரம் மூலம் தீயை அணைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை வீடுகளில் இருந்து சுமார் 50 பேர் வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று SCDF கூறியது.

இந்த தீயினால் படுக்கையறையில் அமைத்துள்ள ஜன்னல் கண்ணாடி சட்டங்கள் உடைந்து தரையில் விழுந்ததாகவும் அது கூறியது.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த விசாரணை நடைபெறுகிறது.

“இனிமே கட்டுப்பாடு கிடையாது… தாராளமா வரலாம்” – அறிவிப்பை வெளியிட்டு அசத்திய நாடு