விரைவில் திறக்கப்படுகிறது உட்லேண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம்!

Photo: Melvin Yong Official Facebook Page

 

சிங்கப்பூரில் உள்ள புதிய உட்லேண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Woodlands Integrated Transport Hub- ITH) சில வாரங்களில் (ஜூன் 13) செயல்பாட்டு வரும். இது சிங்கப்பூர் நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாகும். பேருந்து நிலையத்தை இரண்டு எம்ஆர்டி கோடுகளுடன் (MRT LINES) (என்எஸ்எல் & டிஇஎல்) இணைக்கிறது காஸ்வே பாயிண்ட் ஷாப்பிங் மால் (Causeway Point Shopping Mall). இந்த பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வழித்தடங்களில் சோதனை அடிப்படையில் பேருந்துகளை இயக்கியது எஸ்எம்ஆர்டி (SMRT).

 

புதிய பணியாளர்களுக்கான ஓய்வு பகுதி மற்றும் என்.டி.டபிள்யூ.யூ. கேண்டீன் (NTWU Canteen) ஆகியவை இறுதிக் கட்டப் பணிகளில் உள்ளது. சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்தவுடன் கேண்டீன் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக கட்டப்பட்ட பேருந்து பூங்காவில் ஏற்படக் கூடிய அபாயங்கள் குறித்து தேசிய போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் கிளைத் தலைவர்கள் (National Transport Workers Union Branch Leaders) மற்றும் பேருந்து கேப்டன்களிடம் (Bus Captains) இருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளது. புதிய ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் செயல்படுத்தப்பட உள்ளது.