வேலை அனுமதியில் புதிய நடைமுறை: வெளிநாட்டு ஊழியர்களை குறைப்பதே நோக்கம் –

வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு
Photo: Benar

சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள், EP வேலை அனுமதியின்கீழ் வரும் வெளிநாட்டு ஊழியர்களின் தகுதிகளை சரிபார்ப்பது கட்டாயம் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

அந்த புதிய நடைமுறை வரும் செப். 1, முதல் நடப்புக்கு வரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு – லிஸ்ட்ல நீங்க இருக்கீங்களானு செக் பண்ணிக்கோங்க!

உண்மையான கல்வித் தகுதிகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் மோசடிகளில் இருந்து காப்பதே அதன் நோக்கம்.

இதுவரை மூன்றாம் தரப்பிடம் இருந்து மட்டுமே ஊழியர்களின் கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மை அறியப்பட்டு வந்தது. முதலாளிகளும் அவர்களிடம் இருந்தே அதனை அறிந்து வந்தனர்.

ஆனால், இனி அனைவரும் அதனை சோதனை செய்யும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நிறுவனங்களும், வெளிநாட்டு ஊழியர்களும் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏனெனில் இதனால் காத்திருப்பு காலம் அதிகமாகும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு ஊழியர்களை குறைத்து, உள்ளூர் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இதன் நோக்கம் என்று மனிதவளத் துறை நிபுணர் அரவிந்த் கூறினார்.

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்: யார் அவர் விசாரணை..