“இந்திய ஊழியரின் Work pass அனுமதி புதுப்பிக்கவில்லை…” – பிஎப்ஐ-க்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டுக்கு சிங்கப்பூர் பதில்

singapore Foreigners mom salary
AFP

சிங்கப்பூரில் பணிபுரியும் இந்திய ஊழியர் ஒருவர், தற்போது இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு நன்கொடை திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அவர், இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு (PFI) நன்கொடைகளை பெற்றதாக கண்டறியப்பட்டது.

சிங்கப்பூரில் “buck moon” என்னும் சூப்பர் மூனை காண அரிய வாய்ப்பு – எங்கே, எப்போது காணலாம்?

Work pass அனுமதியில் வேலை

பஹருதீன் சாஹுல் ஹமீத் என்ற இந்திய ஊழியர் நிதி திரட்டியபோது சிங்கப்பூரில் Work pass அனுமதியில் வேலை பார்த்தவர் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (ISD) விளக்கம் கூறியுள்ளது.

மேலும், PFI அமைப்புடன் அவருக்கு தொடர்பு இருந்தது குறித்தும் அவர் விசாரிக்கப்பட்டதாகவும் ISD குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம் இல்லை

அவர் ஒரு PFI ஆதரவாளராக இருந்தபோதிலும், அவர் சிங்கப்பூருக்கு அச்சுறுத்தலாக இருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ISD தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் அவரது Work pass அனுமதி புதுப்பிக்கப்படாததால் அவர் சிங்கப்பூரை விட்டு சென்றார் என்பதையும் ISD உறுதிப்படுத்தியது.

“ஹமீத் சிங்கப்பூருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்பதும், பயங்கரவாதச் செயல்களுக்காக அவர் நிதி திரட்டவில்லை” என்பதையும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக ISD கூறியது.

வேலை அனுமதி புதுப்பிக்கப்படவில்லை

PFI உடனான தொடர்பு காரணமாக, ஹமீதின் வேலை அனுமதி புதுப்பிக்கப்படவில்லை என்றும், மேலும் அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 21, அன்று சிங்கப்பூரை விட்டு வெளியேறினார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஹமீத் சிங்கப்பூர் மற்றும் பிற இடங்களில் இருந்து PFIக்காக நிதி திரட்டுவதாக இந்திய ஊடகங்கள் முன்னதாக ஜூன் மாதம் தெரிவித்தன.

அவர் தமிழகத்தின் மதுரையில் தரையிறங்கியபோது கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

கட்டுமான ஊழியர் விளையாட்டாக செய்த செயல்… அவருக்கே வினையாய் அமைந்தது – S$3,500 அபராதம்