Work pass அனுமதியில் குளறுபடி; அதிரடி அமலாக்க சோதனை… சிக்கிய ஊழியர்கள்

பொது பொழுதுபோக்கு நிலையங்களில் அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர், அப்போது Work pass குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக 20 முதல் 33 வயதுக்குட்பட்ட ஐந்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

செராங்கூன் சாலை, நார்த் பிரிட்ஜ் சாலை, கிச்சனர் சாலை, Aliwal street, Soloman street, Middle ரோடு, Dunlop Street, Circular Road மற்றும் பீச் சாலை ஆகிய இடங்களில் அமைந்துள்ள 16 பொது பொழுதுபோக்கு மற்றும் இரவு நேர கேளிக்கை விடுதிகளில் இந்த அமலாக்க சோதனை நடத்தப்பட்டது.

கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு ஊழியர்கள் கைது

மத்திய காவல் பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையில் மொத்தம் 134 நபர்கள் அதிரடி சோதனை செய்யப்பட்டனர்.

ரகசிய குழு உறுப்பினர், போதைப்பொருள், பயங்கர ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக சிலர் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டம் 1990 இன் கீழ் செல்லுபடியாகும் work pass இல்லாமல் பணியில் இருந்ததாக 25 வயது ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் அதிக தொடக்க சம்பளத்தை விரும்பும் ஊழியர்கள்!