வெளிநாட்டு ஊழியர்களுக்கு இதனை கட்டாயம் செய்ய வேண்டும் – மீறினால் முதலாளிகளின் Work Pass சலுகை ரத்து

Work permit வேலை அனுமதியில் இப்படியும் மோசடி நடக்கும்.. சிக்கிய வேலைவாய்ப்பு முகவருக்கு சிறை
Pic: Unsplash

Foreign Workers Work Pass privileges: COVID-19 பாதிப்புக்குள்ளான ஊழியர்களுக்கான விடுப்பு ஏற்பாடுகள் குறித்த மனிதவள அமைச்சகத்தின் (MOM) ஆலோசனைக்கு கட்டுப்படாமல் வேண்டுமென்றே மறுக்கும் முதலாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், முதலாளிகளின் work pass அனுமதிச் சலுகைகள் ரத்து செய்யப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று (மார்ச் 9) தெரிவித்தார்.

காயங்களுடன் சாலையில் கிடந்த பெண்… நாசம் செய்தவர்களை CCTV மூலம் அடையாளம் கண்ட போலீஸ் – 12 மணி நேரத்திற்குள் கைது

ஆலோசனைக்கு இணங்க மறுக்கும் முதலாளிகளுக்கு MOM அபராதம் விதிக்குமா? – பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தீர்வுகள் என்ன? என்ற கேள்விகள் நாடாளுமன்றத்தில் எழுந்தன.

இந்த கேள்விகளுக்கு பதிலளித்த டாக்டர் டான், இணங்க தவறும் முதலாளிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இவ்வாறான முதலாளிகள் குறித்து புகார் செய்யலாம் என்றும் கூறினார்.

அந்த ஆலோசனை என்ன?

மனிதவள அமைச்சகத்தின் ஆலோசனைபடி, கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் இருந்தாலும் வேலைக்கு விடுப்பு வழங்க வேண்டும்.

இந்த தனிமை காலத்தில் இருக்கும் ஊழியர்களிடம் ஊதியம் இல்லாத விடுப்பு எடுக்குமாறு சொல்லக் கூடாது.

Work pass சலுகை ரத்து

இதை பின்பற்ற தவறினால், முதலாளிகளின் Work pass அனுமதிச் சலுகைகளை MOM ரத்து செய்யும் என எச்சரித்துள்ளார் அவர்.

தவறிழைத்த முதலாளிகள் குறித்து இதுவரை புகார் வரவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் இனி இதெல்லாம் “கட்டாயம்” – அதிரடி அறிவிப்பு