“நான் இனி பயணிக்க விரும்பவில்லை … ஒருவேளை மற்றொரு தொற்றுநோய் அபாயம் ஏற்படலாம்” அஞ்சி நடுங்கும் வெளிநாட்டு ஊழியர்கள்!

(Photo: Overseas Foreign Workers in Singapore/FB)

சொந்த நாட்டிற்கு செல்ல தயாராக இருந்த திரு அசார் சம்சி என்ற வெளிநாட்டு ஊழியர் டிக்கெட் எடுப்பதற்காக குயின் ஸ்ட்ரீட் பேருந்து நிலையத்தில் வரிசையில் நின்றார், அது தான் அவருக்கு சிங்கப்பூரில் வாழும் கடைசி நாள்.

36 வயதான மலேசிய நாட்டை சேர்ந்த ஊழியர், நான்கு குழந்தைகளுக்கு தந்தை ஆவார். சிங்கப்பூரில் ஆபரேட்டராக பணிபுரிகிறார் அவர்.

AYE விரைவுச்சாலையில் கோர விபத்து – பரிதாபமாக உயிரிழந்த ஓட்டுநர்; தகவல் கோரும் குடும்பம்!

சுமார் இரண்டு வருடங்கள் தன்னுடைய குடும்பம், குழந்தைகளை பிரிந்திருந்த அவர் இறுதியாக தாயகம் திரும்பினார்.

திரு அசார், தொற்றுநோய்க்கு முன்பு செய்ததைப் போலவே, வேலைக்காக ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் இடையே தினமும் மோட்டார் சைக்கிளில் பயணிப்பார். இதனால் அவருக்கு சிங்கப்பூரில் தங்கும் அறை வாடகை மாதம் S$500 மிச்சமாகும்.

ஆனால் மற்ற சில மலேசியர்களுக்கு, சிங்கப்பூர் மற்றும் ஜோகூர் இடையே தினமும் பயணம் செய்வது என்ற எண்ணம் மிகவும் கடினமானதாக உள்ளது.

தொற்றுநோய் காரணமாக எல்லை மூடப்பட்ட நிலையில், சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களின் அறைகளுக்கான தேவை அதிகரித்தது, இதனால் உட்லண்ட்ஸின் வாடகை சுமார் 20 சதவீதம் அதிகரித்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

“பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதால், கூடுதலாக மலேசியர்கள் குறிப்பாக Work pass அனுமதி பெற்றவர்கள் சிங்கப்பூர் திரும்புவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று ERA ரியல்ட்டி முகவர் அலெக்ஸ் செங் கூறினார்.

தொற்றுநோயின் போது தன் சிங்கப்பூர் மனைவி, குழந்தைகளை விட்டு மலேசியாவில் இருந்த ஊழியர் பைசல் கூறியதாவது; “நான் இனி பயணிக்க விரும்பவில்லை … ஒருவேளை மற்றொரு தொற்றுநோய் அபாயம் ஏற்படலாம் மற்றும் எல்லைகள் மீண்டும் மூடப்படலாம். அதனால் நான் அந்த ரிஸ்க்கை எடுக்க விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

கொரோனா தாக்கம் சிங்கப்பூரில் பணிபுரியும் அனைத்து தரப்பு வெளிநாட்டு ஊழியர்களையும் கடுமையாக பாதித்தது என்று சொன்னால் அது மிகையாகாது. தன் குடும்பம், குழந்தைகளை விட்டு பிரிந்து வாடும் வெளிநாட்டு ஊழியர்கள் அனைவருக்கும் பொற்காலம் பிறக்க கடவுள் அருள் புரியட்டும்.

உடும்பை பாலியல் நாசம் செய்த நான்கு பேர்… CCTV கேமராவில் பகீர் – கைது செய்த இந்திய போலீஸ்