Work permit, வெளிநாட்டு ஊழியர்களே உங்கள் வேலைக்காக இதை கண்டிப்பா செய்ங்க – அச்சம் வேண்டாம்!

migrantworker
Getty Images

வெளிநாட்டு ஊழியர்களுக்கு முக்கியம் வாய்ந்த பாதுகாப்பு வேண்டும் என குரல் எழுந்துள்ளது.

வேலையிடத்தில் பாதுகாப்பு நடைமுறை தொடர்பாக புகார் செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரி அந்த குரல் எழுந்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்காக இயங்கும் லாப நோக்கமில்லாத அமைப்பு ஒன்று இதனை முன் மொழிந்துள்ளது.

“எதிர்த்து கேள்வி கேட்டா பொட்டிய கட்டு..” என்ற நிலையில் தள்ளப்பட்டுவிடுவோமோ? என்ற அச்சம் ஊழியர்கள் மத்தியில் நிகழ்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேலையிட விபத்தில் சிக்கி வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் அது உச்சத்தை தொட்டது.

இதற்கு நிறுவனங்களின் பாதுகாப்பு கவனமின்மை காரணமாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் சூழலில், பாதுகாப்புக்கு குறித்து புகார் அளிக்க ஊழியர்கள் முன்வர வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

44 பேர் வேலையிட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர், அவர்களின் மூன்றில் ஒருவர் கட்டுமான ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.