சிங்கப்பூரில் Work permit, S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது கட்டாயம் – புதிய விண்ணப்பம், புதுப்பித்தலுக்கு பொருந்தும்

(Photo: NYTimes)

சிங்கப்பூரில் Work permit அனுமதி மற்றும் S Pass வைத்திருப்பவர்களுக்கு கட்டாய மருத்துவக் காப்பீடு குறித்து மனிதவள மூத்த அமைச்சர் கோ போ கூன் தெரிவித்தார்.

இது முதலாளிகளை, பெரிய மற்றும் எதிர்பாராத மருத்துவக் கட்டணங்களிலிருந்து சிறந்த முறையில் பாதுகாக்கும் என்று நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 4) அமைச்சர் கோ தெரிவித்தார்.

Breaking: S Pass க்கு பதிலாக இந்திய ஊழியர்கள் உட்பட சில வேலைகளில் உள்ள ஊழியர்களுக்கு Work permit அனுமதி!

இந்த புதிய கட்டாய தேவை, வீட்டு பணிப்பெண்களுக்கும் பொருந்தும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய Work permit, S Pass விண்ணப்பங்கள்

அனைத்து புதிய work permit அனுமதி மற்றும் S Pass விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தல்களுக்கும் இது பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இது இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றிய மேலதிக விவரங்கள் சரியான நேரத்தில் வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதலாளிகளே பொறுப்பு

சிங்கப்பூரில் work permit மற்றும் S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கான மருத்துவச் செலவுகளுக்கு முதலாளிகளே பொறுப்பாவார்கள்.

இந்த ஊழியர்களின் மருத்துவக் கட்டணங்கள் MediShield Life மற்றும் MediFund போன்ற தேசியத் திட்டங்களின் கீழ் மானியம் அல்லது காப்பீடு செய்யப்படுவதில்லை.

முதலாளிகள் தங்கள் ஊழியர்களின் மருத்துவக் கட்டணங்களைச் சிறப்பாக நிர்வகிக்க, work permit மற்றும் S Pass வைத்திருப்பவர்களுக்கு குறைந்தபட்சம் S$15,000 இல் மருத்துவக் காப்பீட்டை வாங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

JUSTIN: இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! – இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு தனிமை இல்லா சேவை!