“Work permit வேலை கிடைத்தும் சிங்கப்பூர் வர முடியல” – காரணம் இது தான் ஊழியர்களே!

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வேலை
Photo: Roslam Rahman/AFP/Getty Images

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகவே உள்ளது.

அதாவது CMP என்னும் கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறை துறைகளில் உள்ள Work permit வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை தொற்றுநோய் தாக்கத்திற்கு பிறகு 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டின் இறுதியில் மட்டும் சுமார் 7000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வேலைக்காக வந்துள்ளனர் என்ற தகவலையும் MOM கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள், விடுதிகளுக்கு பணியாற்றும் MOM அதிகாரி… சிறுமியிடம் சில்மிஷ வேலை – பிடித்து சிறையில் அடைத்த போலீஸ்

இதன் காரணமாக அவர்களுக்கு தேவையான வசதிகளையும் அமைச்சகம் ஆராய்ந்து வருவதால், அவர்களுக்கான படுக்கை வசதிகளை அதிகப்படுத்தவும் அமைச்சகம் முனைந்துள்ளது.

Work permit வேலை கிடைத்தும் விடுதிகளில் இடப் பற்றாக்குறை காரணமாக சிங்கப்பூர் வரமுடியாமல் போனவர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்தது.

இது தொடர்பாக எந்த எண்ணிக்கையும், காரணத்தையும் MOM கணக்கு வைத்துக்கொள்வதில்லை என்று எழுத்துப்பூர்வமாக அமைச்சர் டான் சீ லெங் பதிலளித்தார்.

செந்தோசா வானில் திடீரென தோன்றிய மர்மமான கருப்பு வளையம்: “என்னவா இருக்கும்” – குழப்பத்தில் பொதுமக்கள்