சிங்கப்பூரில் பணிபுரியும் Work permit, S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் புதிய விதி

retrenchments-2024-increase-ntuc-measures

சிங்கப்பூரில் பணிபுரியும் Work permit மற்றும் S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் கட்டாய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அவ்வாறான ஊழியர்களுக்கு உயர் மருத்துவ காப்பீட்டுத் தொகை குறைந்தபட்சம் S$60,000 என உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போதைய வரம்பு S$15,000 என உள்ளது, இதனை வருடாந்திர கோரல் S$60,000 என மாற்றம் செய்து முதலாளிகள் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

வீட்டு பணிப்பெண்களுக்கும் இந்தப் புதிய விதிமுறை பொருந்தும் என்பது கூடுதல் தகவல்.

ஊழியர்களுக்கான மருத்துவச் செலவுகள் பெரிய அளவில் அதிகரிக்கும்போது, அதனை ஈடுகட்ட இந்த புதிய நடைமுறை உதவும் என்றும், முதலாளிகளின் செலவினங்களைக் குறைக்கவும் இது உதவும் என்றும் மனிதவள அமைச்சகம் (MOM) இன்று வெள்ளிக்கிழமை கூறியது.

ஆண்டுக்கு சராசரியாக 1,000க்கும் மேற்பட்ட முதலாளிகள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதாக மனிதவள மூத்த இணை அமைச்சர் கோ போ கூன் கடந்த ஆண்டு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.