சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தாராளமாக வர முடியுமா? – Work permit, S Pass ஊழியர்களுக்கு முன் அனுமதி வேண்டுமா?

singapore Foreigners mom salary
AFP

சிங்கப்பூரின் தகுதியுடைய Long-term pass என்னும் நீண்ட கால அனுமதி உடையோருக்கான நுழைவு அனுமதிகளை சிங்கப்பூர் அரசாங்கம் நீக்கியுள்ளது.

அதாவது குறிப்பிட்ட, நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள் சிங்கப்பூருக்குள் நுழையும் முன்பாக அனுமதி பெற தேவையில்லை என்று மனிதவள அமைச்சகம் (MOM) அறிவித்துள்ளது.

இந்திய பயணிகளை ஈர்க்க சிங்கப்பூர் திட்டம்: “தமிழ்நாடு தான் டார்கெட்” – மாஸ் காட்டும் தலைநகர் சென்னை!

மேலும், அவர்கள் கண்டிப்பாக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களாக இருக்க வேண்டும் என்றும் MOM கூறியுள்ளது.

யாருக்கு முன்-அனுமதி தேவை இல்லை?

  • Employment pass
  • S pass
  • Long-term விசிட் பாஸ்
  • Student’s Pass
  • பயிற்சி வேலைவாய்ப்பு பாஸ்
  • Entrepass
  • Personalised employment pass
  • டெக்.பாஸ்
  • வேலை விடுமுறை பாஸ்
  • Dependant’s pass

Work permit ஊழியர்களுக்கு முன்-நுழைவு அனுமதி தேவையா?

Work permit அனுமதி பெற்ற ஊழியர்கள் முன் அனுமதி பெற்று சிங்கப்பூர் வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

VTL வழி

VTL வழியாக சிங்கப்பூருக்கு வர விரும்பும் கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறைத் துறைகளில் (CMP) பணிபுரியும் ஊழியர்கள் Vaccinated travel pass (VTP) அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அதே போல வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் மற்றும் Work permit அனுமதி வைத்திருக்கும் மற்ற ஊழியர்களும் கண்டிப்பாக VTP அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Work permits ஊழியர்கள், non-VTL என்னும் VTL அல்லாத விமானம் வழி இங்கு வர விரும்பும் ஊழியர்கள் நுழைவு ஒப்புதலுக்கு கண்டிப்பாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஊழியர்களின் லாரியின் மீது ஏறி பொருட்களை வீசி தகராறு…போலீசுக்கு திட்டு, உதை – வெளிநாட்டவருக்கு சிறை, அபராதம்!