Work permits, S Pass ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் மிக பெரிய மோசடி – சிக்கிய நிறுவனங்கள்

Work permits S Pass salary salaries false offences
(Photo: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் MES குழுமத்தின் கீழ் உள்ள மூன்று நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நான்கு முன்னாள் இயக்குநர்கள் பல்வேறு வேலைவாய்ப்பு குற்றங்களில் ஈடுபட்டதற்காக தண்டனை வழங்கப்பட்டுள்ளது என மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் Work permits மற்றும் S Pass ஆகியவற்றின் சம்பளம் தொடர்பில் பொய்யான தகவல்களை அந்நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ளன.

சிங்கப்பூரில் செப்.1 முதல் நடப்புக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்

2009 மற்றும் 2019 க்கு இடையில், Work permits அனுமதி மற்றும் S Pass அனுமதிக்கு விண்ணப்பிக்கும் அல்லது புதுப்பிக்கும் போது 111 தவறான சம்பளம் தொடர்பான தகவல்களை மூன்று நிறுவனங்களும் அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளன.

பொய்த் தகவல்கள் சமர்ப்பிப்பது தொடர்பில் இதுவரை அமைச்சகம் விசாரித்த மிகப்பெரிய வழக்கு இது தான் என்று MOM கூறியுள்ளது.

இந்நிலையில், Mini Environment Service நிறுவனத்துக்கு S$396,500, Labourtel Management Corporation நிறுவனத்துக்கு S$120,000 மற்றும் MES லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துக்கு S$59,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அந்த நிறுவனங்கள் தளவாடங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறை வேலைகளை செய்கின்றன.

Labourtel நிறுவனம் நான்கு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளை நிர்வகித்தது.

இந்நிலையில், Labourtel நிறுவனம் குற்றத்தில் சிக்கியதைத் தொடர்ந்து, அது நிர்வகித்த தங்கும் விடுதிகள் புதிய ஆபரேட்டர்களிடம் ஒப்படைக்கும் என MOM கூறியுள்ளது.

முன்னாள் இயக்குநர்களுக்கு நான்கு பேருக்கும் 4 மாதம் முதல் 42 வாரங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

லிட்டில் இந்தியாவில் உள்ள கடைக்கு S$5,000 அபராதம் – ஏன் தெரியுமா?