விபத்தில் சிக்கி ஊழியர் மரணம் – வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க நிறுவனத்துக்கு தடை

Indian charged for duping insurers for foreign workers injury claims

சிங்கப்பூரில் வேலையிட விபத்தில் சிக்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார், இந்த ஆண்டில் இதுவரை ஏற்பட்ட நான்காவது வேலையிட மரணம் இது.

இந்த விபத்து 61 அலெக்ஸாண்ட்ரா டெரஸ் ஹார்பர் லிங்க் காம்ப்ளெக்ஸில் கடந்த பிப்.2 பிற்பகல் 2.15 மணியளவில் நடந்தது.

கிடங்கில் கப்பல் கொள்கலனில் இருந்து கண்ணாடி கதவுகளை ஏற்றிக்கொண்டிருந்த மூன்று பேர் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிரடி மாற்றங்கள் – மார்ச் 1 முதல்…

அதில், 53 வயதான சிங்கப்பூரர் ஒருவர் இறந்ததாக மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

சுமார் ஒன்பது கண்ணாடி கதவுகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக MOM கூறியது.

அதில் இரண்டு ஊழியர்கள் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் 53 வயதுடைய அந்த ஊழியர் காயங்கள் காரணமாக அங்கேயே இறந்தார். மற்றவரின் உடல்நிலை சீராக உள்ளதாக MOM கூறியுள்ளது.

மூன்றாவது ஊழியர் காயமடையவில்லை.

விசாரணையை தொடங்கியுள்ள அமைச்சகம், மூன்று மாதங்களுக்கு புதிய வெளிநாட்டு ஊழியர்களை அந்நிறுவனம் பணியமர்த்த தடை விதித்துள்ளது.

சிங்கப்பூருக்கு இனி ஈஸியா வரலாம், போகலாம்.. வெளிநாட்டு பயணிகளுக்கு செம அப்டேட்