நிறுவனத்தின் அலட்சியம்… பறிபோன அப்பாவி ஊழியரின் உயிர் – MOM கடும் நடவடிக்கை

lightning strike 3 construction workers hospital
Pic: Getty Images

போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தவறிய நிறுவனம் ஒன்றுக்கு S$200,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தின்கீழ் கடந்த ஜூன் 28 ஆம் தேதி அன்று அந்நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஊழியர்களை ஏற்றி செல்லும் லாரி, 5 பைக்குகள் மோதி விபத்து: 5 பேர் மருத்துவமனையில்…

கடந்த 2021 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தில் நடந்த வேலையிட விபத்தில் சிக்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

ஏனெனில், அங்கு முறையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அவர் இறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அதோடு சேர்த்து வைடிஎல் கான்கிரீட் நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குனரான டான் சீ என்பவருக்கும் S$125000 அபராதம் விதிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

அப்போது அவர் வேலையிடத்தில் கண்காணிப்பு பொறுப்பில் இருந்ததாகவும், ஆனால் அவர் சுமார் ஒரு ஆண்டு காலமாக அங்கு செல்லவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் தன் பொறுப்புணர்த்து செயல்படாத காரணத்தால் ஒரு உயிர் பலியானதாக அமைச்சகம் கூறியுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூர் லாட்டரியில் எப்படியெல்லாம் வின் பன்றாங்க பாருங்க.. 4D டிராவில் வெற்றிபெற்ற நபர் – ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்