இரும்புக் கம்பி மொத்தமாக விழுந்ததில் உடல் நசுங்கி வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்!

GOOGLE MAPS

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மீது இரும்புக் கம்பி மொத்தமாக விழுந்ததில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 11) காலை இந்த சம்பவம் நடந்தது, உயிரிழந்த அவர் வங்காளதேச ஊழியர் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் மூன்று ஆடவர்களை தேடி வரும் காவல்துறை!

விபத்தின் போது, ​​டவர் கிரேன் மூலம் அந்த எஃகு கம்பிகள் மேலே தூக்கப்பட்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் Bedok Reservoir பார்க்கில் உள்ள பணித்தளத்தில், அதாவது “ஹோம் டீம் நேஷனல் சர்வீமென்ஸ்” (NSmen)-க்கான கிளப்ஹவுஸ் கட்டப்பட்டு வரும் இடத்தில் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து, 900 பெடோக் நார்த் ரோட்டில் காலை 9.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் பணிபுரியும் பாதுகாப்புக் காவலருக்கு சிறை

சின் லீ கட்டுமான நிறுவனத்தில் (Chin Lee Construction) பணிபுரிந்த அந்த ஊழியர் விபத்துக்கு பின்னர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசாரும் MOM அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பணிதளத்தின் ஆக்கிரமிப்பு நிறுவனமான CMC கன்ஸ்ட்ரக்ஷனிடம், அங்குள்ள அனைத்து தூக்கும் நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு MOM கூறியுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை குறைந்தபட்சம் 35 பணியிட இறப்புகள் ஏற்பட்டுள்ளன. 2020இல் 30 இறப்புகள் மற்றும் 2019இல் 39 இறப்புகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

இனி கட்டாய PCR சோதனை, ஏழு நாள் தனிமை இல்லை: 14 நாள் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும்