ஊழியரின் iPhone -ஐ ஆட்டையை போட்ட டெலிவரி ஓட்டுனர்.. “தகவல் தெரிந்தால் சொல்லுங்க” – கோரிக்கை வைக்கும் ஊழியர்

Caught on camera: Delivery rider steals man's iPhone at Geylang eatery
Facebook/RX Cau

சிங்கப்பூர் ஒப்பீட்டளவில் மிகவும் பாதுகாப்பான இடமாக இருந்தாலும் கூட, சில நேரங்களில் நம்முடைய மெத்தனம் காரணமாக சில அசம்பாவிதங்கள் அரங்கேறத்தான் செய்கின்றன.

ஃபேஸ்புக்கில் RX Cau என்று அழைக்கப்படும் ஒருவர், தனது பணியிடத்தில் உள்ள மேசையில் வைத்துதிருந்த தனது மொபைல் ஃபோனை பறிகொடுத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இதனை அடுத்து அவர் கடந்த திங்கள்கிழமை (மே 1) அன்று சமூக ஊடக தளம் வாயிலாக பொதுமக்களிடம் உதவி கோரினார்.

அதில் “நீங்கள் இந்த நபரைக் கண்டால், தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ளவும்” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

என்ன நடந்தது?

ஃபேஸ்புக் பதிவில் அவர் கூறியதாவது; கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் 12 Haig சாலையில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக Cau பகிர்ந்துள்ளார்.

அவர் வெளிர் நீல நிற iPhone 13 Pro Maxஸை டேபிள் ஒன்றில் வைத்ததாகவும், பின்னர் டெலிவரி ஓட்டுநர் ஒருவர் உணவகத்திற்குள் நுழைந்து மேஜையில் இருந்த மொபைல் போனைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதாகவும் Cau பகிர்ந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குறிப்பிட்டார்.

ஊழியர் பின்னர் மேஜையில் அமர்ந்து தனது சொந்த கைபேசியை பயன்படுத்தியதாகவும், அதன் பின்னர் ​​உணவகத்தைச் சுற்றி முற்றிலும் பார்த்து iPhone யும் அவரின் போனுடன் சேர்த்து எடுத்து சென்றதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.